Press "Enter" to skip to content

சட்டசபைத் தேர்தலில் வாக்களித்த சிம்பு, திரிஷா

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை திரிஷா மற்றும் நடிகர் சிம்பு ஆகியோர் வாக்களித்தனர்.

சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி, விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, ஜீவா உள்ளிட்ட பலர் வாக்குகளை செலுத்தினார்கள். 

இந்நிலையில், நடிகர் சிம்பு சென்னை தி-நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதேபோல் நடிகை திரிஷாவும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். அவர்கள் வாக்களிக்க வந்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகின்றன.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »