Press "Enter" to skip to content

உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா? – மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

நடிகர் உதயநிதி, தனது மகன் இன்பநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நண்பேன்டா, மனிதன், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ ஆகிய படங்களில் நடித்தார். 

தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிகிள் 15 மறுதயாரிப்பு ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதோடு திமுக-வின் இளைஞரணி செயலாளராகவும் இருக்கிறார். 2021 தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட்டார்.

உதயநிதியின் மனைவி கிருத்திகாவும், தமிழ் திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களுள் ஒருவர். இவர் வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் உதயநிதி, தனது மகன் இன்பநிதியின் தோளில் சக நண்பரைப் போல் கை போட்டு தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்தவர்கள், உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »