Press "Enter" to skip to content

பிரபல டோலிவுட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய்?

நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக பிரபல டோலிவுட் இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் விஜய். இவர் நடித்த மக்கள் விரும்பத்தக்கதுடர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் வம்சி சென்னையில் நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும், இந்தக் கதை விஜய்க்கு பிடித்துப்போனதால் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது. தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற தோழா படத்தை வம்சி தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »