Press "Enter" to skip to content

இந்தியில் மறுதயாரிப்புகாகும் திரிஷ்யம் 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திரிஷ்யம் 2 திரைப்படத்தின் இந்தி மறுதயாரிப்பு உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் இண்டர்நேஷனல் வாங்கி இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் திரிஷ்யம். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு அத்தனையிலும் வெற்றி கண்டது.

சில மாதங்களுக்கு முன் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஓடிடி தளத்தில் ‘திரிஷ்யம் 2’ வெளியாகி முதல் பாகத்தைப் போலவே விமர்சனங்களிலும், ரசிகர்களாலும் பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்த வரவேற்பால் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் மறுதயாரிப்பு பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தின் தெலுங்கு மறுதயாரிப்புகும், ரவிச்சந்திரன் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கன்னட மறுதயாரிப்புகும் தயாராகி வருகிறது.

தற்போது படத்தின் இந்தி மறுதயாரிப்புகும் உறுதியாகியுள்ளது. மறுதயாரிப்பு உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் குமார் மங்கத் பதக் வாங்கி இருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »