Press "Enter" to skip to content

தனுஷுடன் ஏற்பட்ட மோதல் குறித்து மனம் திறந்த ‘ஜகமே தந்திரம்’ தயாரிப்பாளர்

தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார், சசிகாந்த் தயாரித்து உள்ளார்.

தனுஷின் ஜகமே தந்திரம் படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிடுவதற்கு நடிகர் தனுஷ் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும், இப்படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர் சசிகாந்திடம், தனுஷுடனான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து அவர் கூறியதாவது: “கடந்த 4 மாதங்களாக, இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது தொடர்பாக நான் எந்தவித கருத்தும் சொன்னதில்லை. எதிர்மறையாக இல்லாமல், நாம் தயாரித்துள்ள படம் உலக அளவில் போகப் போகிறது என்பதில் மட்டுமே இருக்கிறேன்.

நானும் தனுஷும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. இந்தப் பட விவகாரத்தில் எங்களுக்கிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனுஷும் இந்தப் படத்தின் நல்லதுக்குத்தான் பேசினார். ‘ஜகமே தந்திரம்’ திரையரங்கத்தில் ரிலீசானால் நன்றாக இருக்கும் என்று அவர் சொன்னது சரியான கருத்து தான்.

ஆனால், கமர்ஷியல் ரீதியாக கடந்த ஓராண்டாக, இத்தகைய பெரிய வரவு செலவுத் திட்டம் படத்தை வைத்துக் கொண்டிருப்பது, எவ்வளவு வட்டி என்பது எனக்கு தான் தெரியும். இது தொடர்பாக நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. தற்போது இந்த படம் உலகளவில் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து அமெரிக்காவில் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக அது எனக்கு  சந்தோஷத்தை தருகிறது”. இவ்வாறு சசிகாந்த் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »