Press "Enter" to skip to content

மிகுதியாக பகிரப்பட்ட புகைப்படம்… அஜித் ரசிகர்கள் ஆதங்கம்

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வலிமை படத்தின் மோஷன் விளம்பர ஒட்டியை இரு தினங்களுக்கு முன் படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த மோஷன் விளம்பர ஒட்டி ரசிகர்களிடமிருந்து இரு விதமான விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் மோஷன் விளம்பர ஒட்டி, யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றதைத் தொடர்ந்து அதற்காக சில விளம்பர ஒட்டிகளை படக்குழுவினர் வெளியிட்டனர்.

அவற்றைப் பார்த்த ரசிகர்கள் இந்த விளம்பர ஒட்டிகளை முதல் பார்வை விளம்பர ஒட்டிகளாக வெளியிட்டிருக்கக் கூடாதா என ஆதங்கப்பட்டுள்ளனர்.எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் ஸ்டைலாக உட்கார்ந்திருக்கும் அஜித்தைப் பார்க்க ஹாலிவுட் நடிகரைப் போல இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல் பார்வை விளம்பர ஒட்டியை விட இந்த விளம்பர ஒட்டி ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »