Press "Enter" to skip to content

விஷ்ணு விஷால் படத்தின் புதிய அப்டேட்

பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். 

இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் பயணம் என்ற காணொளி பாடலை ஜூலை 17 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »