Press "Enter" to skip to content

தீபாவளி போட்டியில் இணையும் அஜித்தின் வலிமை?

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகையில் பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாவதன் மூலம் ரசிகர்களை அதிக அளவு திரையரங்களுக்கு இழுக்கவும் ஓ.டி.டி. தளங்கள் எழுச்சியை கட்டுப்படுத்தவும் முடியும் என்று திரையரங்கம் அதிபர்கள் நம்புகிறார்கள். ஏற்கனவே தீபாவளி பண்டிகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் திரைக்கு வருவதை படக்குழுவினர் உறுதிப்படுத்தி உள்ளனர். 

இந்த நிலையில் அஜித்குமாரின் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் விளம்பர ஒட்டி மற்றும் முதல் பார்வை விளம்பர ஒட்டிகள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் இப்படத்தின் அடுத்த அப்தரவுக வெளியீடு தேதி வரலாம் என்று எதிர்பார்க்கின்றனர். 

அஜித், ரஜினி

ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன. அதுபோல் வருகிற தீபாவளி பண்டிகையிலும் இரு படங்களும் மோதுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »