Press "Enter" to skip to content

தெலுங்கில் அறிமுகமாகும் ‘கர்ணன்’ பட நடிகை

கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை ரஜிஷா விஜயன், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மலையாளத்தில் கடந்த 2016-ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

ரஜிஷா விஜயன்

இதையடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ரஜிஷா, அடுத்ததாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கும் ‘ராமாராவ்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் இயக்க உள்ளார். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »