Press "Enter" to skip to content

விஜய் சேதுபதி – டாப்சி நடித்துள்ள திகில் படம்… ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகிறது

டாப்சி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத புதிய படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள மூடப்பட்டுள்ளதால், புதுப் படங்கள் நேரடியாக ஓடிடி-யிலும், தொலைக்காட்சியிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது. அதேபோல் தற்போது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

டாப்சி, விஜய் சேதுபதி

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள மற்றொரு படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதுமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்சி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத புதிய படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. திகில் நிறைந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள இதில், ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா, சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »