Press "Enter" to skip to content

ஏ.ஆர்.ரகுமானை இழிவுபடுத்திய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா…. ரசிகர்கள் கண்டனம்

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை இழிவுபடுத்திப் பேசியது சமூக ஊடகங்களில் பரபரப்பாகி உள்ளது.

ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா, ஏ.ஆர். ரகுமான் பற்றிய கேள்விக்கு அவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் கூறியுள்ளார். 

மேலும் எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என்றும் பாலகிருஷ்ணா அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

பாலகிருஷ்ணா

இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியதோடு, பாலகிருஷ்ணாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. பாலகிருஷ்ணா தன் படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை அணுகியதாகவும் அவர் மறுத்ததால் எழுந்த காழ்ப்புணர்ச்சியில் இப்படி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »