Press "Enter" to skip to content

வனிதா விஜயகுமாருக்கு 4வது திருமணமா?

நடிகை வனிதா விஜயகுமாருக்கு 4-வது திருமணம் செய்துக் கொள்ளும் யோகம் ஜாதகத்தில் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கணித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து பாதியிலேயே விலகினார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர், வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்வார் என்றும், அவரது வருங்கால கணவரின் பெயர் ’எஸ்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என்றும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

மேலும் அரசியலில் நுழைந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாதிரி வனிதாவாலும் வெற்றி பெற முடியும் எனவும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »