Press "Enter" to skip to content

‘டி44’-ல் தனுஷுக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள் யார்… யார்? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள ‘டி44’ படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.

நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார். நடிகர் தனுஷ் ஏற்கனவே மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்’, ‘குட்டி’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.  தற்போது நான்காவது முறையாக தனுஷ் – மித்ரன் கூட்டணி இணையவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இப்படத்தில் தனுஷுடன் நடிக்கும் நடிகர் – நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

டி44 படக்குழு வெளியிட்ட விளம்பர ஒட்டி

இந்நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர்கள் மூவரும் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »