Press "Enter" to skip to content

ரீ- என்ட்ரி கொடுக்கும் கனகா

கரகாட்டக்காரன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை கனகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க இருக்கிறார்.

மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்த பின்  திரைப்படத்தை விட்டு விலகினார்.

தற்போது மீண்டும் நடிக்க வருகிறார் கனகா. இதுகுறித்து கனகா வெளியிட்டுள்ள காணொளியில், “நான் நடிக்க வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. சில காரணங்களால் இடையில் நடிக்கவில்லை. இப்போது எனக்கு 50 வயது ஆகிறது. தற்போதைய திரைப்படத்தின் போக்கு மாறி இருக்கிறது. ஒப்பனை, சிகை அலங்காரம், துணி மணிகள், செருப்பு, நகை, பேசுவது, சிரிப்பது எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.

கனகா

நான் ஏற்கனவே நடித்த மாதிரி நடித்தால் பழைய மாதிரி இருக்கிறது என்பார்கள். மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளதால் திரைப்படத்தின் புதிய நுட்பங்களை கற்று வருகிறேன். எனக்கு மன உறுதி இருப்பதால் விரைவில் கற்றுக்கொள்வேன்’’ என்று பேசி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »