Press "Enter" to skip to content

மகனால் ஷாருக்கானுக்கு வந்த சோதனை

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்திய வழக்கில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

ஷாருக்கான் மகன் ஆரியன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யபட்டுள்ளார். இதன்காரணமாக மிகப்பெரிய கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது விளம்பங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் நடிகர் ஷாருக்கான் பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்துவருகிறார். இதனால் ஆண்டுதோறும் ஷாருக்கானுக்கு பைஜூஸ் 3 முதல் 4 கோடி ரூபாய் பணம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறுவனமான பைஜூஸ் சில ஆண்டுகளுக்குள்ளாகவே அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஷாருக்கானின் மகன் ஏற்படுத்திய சர்ச்சையால், அவருடன் தொடர்பு கொள்ள அந்நிறுவனம் விரும்பவில்லை என்பதால், அவருடனான விளம்பரங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், விளம்பர தூதுவராக அவர் தொடர்கிறாரா? அல்லது அந்நிறுவனம் அவரை முழுமையாக கைவிட்டுவிட்டதா என்பது குறித்து தெரியவில்லை.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »