Press "Enter" to skip to content

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜ் தோல்வி

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஓட்டுப்பதிவில் கலந்து கொள்ளவில்லை

தெலுங்கு திரைப்படத்தின் நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் களம் இறங்கினார். பிரகாஷ் ராஜூக்கு சிரஞ்சீவி, பவன் கல்யாண் உட்பட பெரிய நடிகர்களின் ஆதரவு இருந்தது. இதனால் பிரகாஷ்ராஜ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது.

பிரகாஷ் ராஜ், விஷ்ணு மஞ்சு

மொத்தம் உள்ள 900 உறுப்பினர்களில் 833 பேருக்குத்தான் வாக்கு அளிக்கும் உரிமை இருந்தது. இதில் 655 வாக்குகள் பதிவானது.  விஷ்ணு மஞ்சுக்கு 381 ஓட்டுக்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் 274 ஓட்டுக்களும் பெற்றார். இதன்மூலம் 113 வாக்கு வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் தோல்வியடைந்தார் பிரகாஷ்ராஜ். ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஓட்டுப்பதிவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »