Press "Enter" to skip to content

இளையராஜாவின் சர்ச்சை கருத்து.. வருத்தம் தெரிவித்த மாரி செல்வராஜ்

இந்திய திரைப்படத்தின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் சர்ச்சை கருத்து சமூக வலைத்தளத்தில் விவாதமானது இதற்கு மாரி செலவராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ப்ளூ கிராஃப் கணினி மயமான ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 

அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இளையராஜா

தற்போது இளையராஜாவின் இந்தக் கருத்துதான் சர்ச்சையை பெரும் விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இளையராஜாவின் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக இயக்குனர் மாரி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் கூறுகையில், ”இளையராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்; இது குறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »