Press "Enter" to skip to content

முதல்-அமைச்சரை சந்தித்த இயக்குனர் சீனு ராமசாமி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாக பிரபல இயக்குனர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தை ஆளும் ‘ஆண் தாய்’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் ‘ஆண் தாய்’ தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இருக்கும் ‘மாமனிதன்’, ‘இடிமுழக்கம்’ ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும், அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைளுக்கு நன்றி கூறி ஜான் ரீடு எழுதிய ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ நூலினை அவருக்கு தந்தேன். 

சீனு ராமசாமி – முதலமைச்சர்

அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான ‘உங்களில் ஒருவன்’ நூலில் கையொப்பமிட்டு பரிசாக தந்தார். ‘மக்கள் அன்பன்’ என் கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்து வாழ்த்தினார்” என்று அதில் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.  

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »