Press "Enter" to skip to content

கையில் குழந்தையுடன் கவின்.. மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கவின், கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது பருவத்தில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘மருத்துவர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

டாடா

2012-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’மனம் கொத்தி பறவை’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம், அதன்பின் தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்துள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுடன் இணைந்து கவின் நடித்துவருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது. ’டாடா’ எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை கவின் வெளியிட்டுள்ளார். அதில், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் வாசகத்துடன் கையில் குழந்தையுடன் கவின் இருக்கும் விளம்பர ஒட்டி வெளியாகி சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »