Press "Enter" to skip to content

இதை அனைவரும் குறைக்க வேண்டும் – இயக்குனர் வசந்த் வேண்டுகோள்

தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனரான வசந்த் மக்களுக்கு சில வேண்டுகோள் வைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திரைப்படம் இயக்குனர் வசந்த், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மண், நாம் பிறப்பது முதல் கடைசி வரை நம்மை தாங்கி காப்பாற்றுகிறது. மண்ணுக்கு, நம்மால் முடிந்த நன்மைகளை செய்ய வேண்டும். நம்மை காக்கும் மண்ணை, நாம் காக்க வேண்டும்.

வசந்த்

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்)கை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நாம் அனைவரும் மரம், செடிகளை நட்டு, சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். “நான் முளைக்க ஆயத்தம், விதைக்க நீங்கள் ஆயத்தம்யா?” என்று செடி கேட்கிறது. இதை நாம் ஊக்கமாக எடுத்துக் கொண்டு மரம், செடி வளர்க்க வேண்டும். மண் குறித்து, மண் சார்ந்த திரைப்படம் தயாரிக்க எனக்கு ஆவல் வந்துள்ளது. விரைவில் மண் வளம் சார்ந்த படம் எடுப்பேன்.

கைபேசி மற்றும் வலைத்தளம் பயன்படுத்துவதை நாம் அனைவரும் குறைத்துக் கொள்ள வேண்டும். இயற்கை விவசாயத்தில் கலப்படம் இருக்கக் கூடாது”.

 இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »