Press "Enter" to skip to content

இந்தி தேசிய மொழி என்ற அஜய் தேவ்கன் கருத்து தவறில்லை என்கிறார் நடிகை கங்கனா ரனாவத்

இந்தியை விட கன்னடம் பழமையானது, தமிழும் மூத்தது என்று யார் தெரிவித்தாலும் அதுவும் தவறவில்லை என்றும் நடிகை கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி:

“தாகத்” திரைப்படத்தின் பட விளம்பரம் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரனாவத் பேசியதாவது:
இந்தி எங்கள் தேசிய மொழி என்று அஜய் தேவ்கன் சொல்வதில் தவறில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தில் பெருமை கொள்ள உரிமை உண்டு. இந்தியை தேசிய மொழியாக ஏற்க மறுப்பது அரசியலமைப்பை மறுப்பதை போன்றது.

நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்வது இதுதான் என்றால், அது உங்கள் தவறு. இந்தியை விட கன்னடம் பழமையானது, தமிழும் மூத்தது என்று ஒருவர் என்னிடம் கூறுகிறார் என்றால், அப்போது அவர்களும் தவறில்லை. 

சமஸ்கிருதம் நமது தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று நான் கூறுவேன், இந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை. ஏன் சமஸ்கிருதம் தேசிய மொழியாகவில்லை.

இன்று நாம் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக பயன்படுத்துகிறோம். அதுதான் இணைப்பாக இருக்க வேண்டுமா அல்லது இந்தி அல்லது சமஸ்கிருதமாக இருக்க வேண்டுமா அல்லது தமிழா? எனவே, இவற்றையெல்லாம் மனதில் வைத்து, ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும், 

இந்தியாவிற்கு என்று தேசிய மொழி கிடையாது. இந்தியை விட தமிழ் பழமையானது என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் சமஸ்கிருதம் அதை விட பழமையான மொழி.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது பெருமை கொள்ள பிறப்புரிமை உள்ளது, அதில் நான் பெருமைப் படுகிறேன்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »