Press "Enter" to skip to content

தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்க பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

யோகிபாபு

இந்நிலையில் தளபதி 66 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் யோகிபாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், சர்க்கார், பீஸ்ட் ஆகிய படங்களில் யோகிபாபு நடித்திருந்ததால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »