Press "Enter" to skip to content

இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.. வைரமுத்து பதிவு

ராஜபக்சே தப்பி ஓட்டம் சர்வதேச சமூகமே தமிழனின் வீரத்திற்கு தலைவணங்கு என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரண மாக மக்கள் புரட்சி வெடித்துள்ளது. சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாக சேர்ந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற குரல் இலங்கை தீவு முழுக்க எதிரொலிக்கிறது.

இதனால் ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் அவரது வீடு போராட்டக்காரர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டதால் வீட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறி திரிகோண மலையில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதே மே மாதம் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் லட்சக்கணக்கான தமிழர்களும் கொல்லப்பட்டனர். இதன் பலனைத்தான் ராஜபக்சே தற்போது அனுபவித்து வருகிறார் என்ற பேச்சு, உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

வைரமுத்து

நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் தாயகம் பிரியேன் தாய் மண்ணில் மரிப்பேன் என்ற பிரபாகரன் தமிழனின் பேராண்மை எங்கே.. ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்சே எங்கே… ஓ சர்வதேச சமூகமே இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு. இவ்வாறு கவிஞர் வைரமுத்து உணர்ச்சிப் பொங்க தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »