Press "Enter" to skip to content

புராதன பொருள்கள் மோசடி புகார்- மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமான அழைப்பு

மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு சென்று வந்த நடிகர் மோகன்லாலிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். மோன்சன் புராதன பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்திற்கு திரைப்படம் பிரபலங்கள் பலரும் வந்து சென்றனர்.

இவரிடம் பழங்கால புராதன பொருள் வாங்கிய ஒருவர், மோன்சன் மாவுங்கல் தன்னை மோசடி செய்து விட்டதாக புகார் கூறினார். இது தொடர்பாக போலீசார் மோன்சன் மாவுங்கல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதற்கிடையே மோன்சன் மாவுங்கல் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய அமலாக்க துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு வந்து சென்ற பிரபலங்கள் மற்றும் அவரிடம் பழங்கால பொருட்கள் வாங்கியவர்களிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

அந்த வகையில் மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு சென்று வந்த நடிகர் மோகன்லாலிடமும் விசாரணை நடத்த அமலாக்க துறையினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து மத்திய அமலாக்க துறையினர் நடிகர் மோகன்லாலுக்கு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பி உள்ளனர்.

அதில் அடுத்த வாரம் அமலாக்க துறையின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறியுள்ளனர். இது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »