Press "Enter" to skip to content

‘இரவின் நிழல்’ படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கியிருந்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து பார்த்திபன், ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரிகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ளது.

இரவின் நிழல்

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் விளம்பரம் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றது. இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நேர்க்கோட்டில் அமையாத (Non-Linear) கதையம்சம் கொண்ட திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. இந்நிலையில் ‘இரவின் நிழல்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. தற்போது இப்படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »