Press "Enter" to skip to content

பாலமேடு ஜல்லிக்கட்டில் 2வது சுற்று ஆரம்பம்…!

தமிழ்நாடு முழுவதும், பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலை கிராமத்தில் ஜாதி மத பேதமின்றி, சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இப்பகுதியில் 69 ஜாதி, மதங்களை சேர்ந்த மக்கள் மெய்வழிசாலை என்ற அமைப்பாக உருவாகி ஒற்றுமையுடன் வசித்து வருகின்றனர். சாலை ஆண்டவரை தெய்வமாக வழிபடும் இப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் பழங்குடியின மக்களான தோடர் இன மக்கள், அவர்களின் பாரம்பரிய கலாச்சாரத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். அத்துடன் கலாச்சார உடை அணிந்து,  பாரம்பரிய நடனம் ஆடினர். இதனை சுற்றுலாப் பயணிகள் பலரும் கண்டு களித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயர்புரத்தில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.  இதில் ஆயிரத்து, 700 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். அதிகாலை திருப்பலி முடிந்தவுடன், ஆலய வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு மத பேதமின்றி பொங்கல் விழாவை கொண்டாடினர்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில், தி.மு.க. 

கலை இலக்கிய அணி சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், 100 மண் பானைகள் வைக்கப்பட்டு, தி.மு.க. மகளிர் அணியினர் பொங்கல் வைத்து, தை முதல் நாளை வரவேற்றனர்.

இதேபோன்று கோவையில் மத நல்லிணக்கதை ஏற்படுத்தும் வகையில், கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள  சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை ஆதாரனை முடிந்தவுடன்,  பாரம்பரிய முறைப்படி, ஆலய வாசலில் சாணம் தெளித்து, கோலமிட், மாவிலை தோரணம் கட்டி, மாட்டு வண்டிகள் புடை சூழ, பொங்கல் வைத்து விவசாயம் செழிக்க சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், பெண் காவலர்கள் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து, தங்கள் குடும்பத்தினருடன், பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பொங்கேற்று மகிழ்ந்தனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »