Press "Enter" to skip to content

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு குட் நீயூஸ்…தமிழக அரசின் திடீர் அறிவிப்பு…!

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு, போட்டி  நடைபெற்றது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்பி வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோர் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதில், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டகளில் இருந்து 650-க்கும் மேற்பட்ட காளைகளும், 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதையடுத்து வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டு சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.

மேலும் படிக்க | விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ;5-வது சுற்றில் 390 காளைகள் களமிறக்கம்!!!

10 சுற்றுகளாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 658 காளைகள் களமிறக்கபட்டன. சீறிப்பாய்ந்த  காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி மின்னல் வேகத்தில் சீறிய காளைகளை உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் மதுரை ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்த விஜய் 28 மாடுகளை பிடித்து முதலிடம் பெற்றார்.  அவனியாபுருத்தை சேர்ந்த கார்த்திக் 18 காளைகளை அடக்கி  2-வது இடத்தை பிடித்தார். 13 காளைகளை அடிக்கி  3 வது இடத்தை பிடித்தார் பாலாஜி.  காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக  நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

மேலும் படிக்க | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 

சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கும் மாடுபிடி வீரர்கள்..!

இதையடுத்து  முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்களுக்கு  கார்,எந்திர இருசக்கரக்கலன் (பைக்) உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் மூர்த்தி  பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.  வீரர்களை போன்றே சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்குஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) பரிசு வழங்கப்பட்டது.

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களால் அவனியாபுரம்  விழாக்கோலம் பூண்டது. ஜல்லிக்கட்டு போட்டியை பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக மைதானத்திற்கு வெளியே எல்.இ.டி திரை வைக்கப்பட்டன.  ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான  மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

மேலும் படிக்க | புதுக்கோட்டையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியால் பரபரப்பு

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »