Press "Enter" to skip to content

அதிமுக பொதுக்குழு தீா்ப்பு இறைவனுக்கே தொியும்…ஓபிஎஸ் சொன்ன பதில்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், விற்பனையாகாமல் தேக்கமடைந்த கரும்புகளை விவசாயிகள் சாலையோரம் வீசிச் சென்றனர். 

மந்தமான கரும்பு விற்பனை :

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தைத்திருநாளை முன்னிட்டு நேற்று முன் தினம் முதல் நகரின் பல்வேறு சாலையோர பகுதிகளில் கரும்பு வியாபாரிகள் கட்டு கட்டாக கரும்புகளை மலை போல் குவித்து வைத்து விற்பனை செய்து வந்தனர். ஆனால், எதிர்ப்பார்த்த படி கரும்பு விற்பனையாகாமல்  மந்தமானதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். எனினும்,  விற்பனை நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த வியாபாரிகளுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. 

சாலையோரம் கிடந்த கரும்புகள் :

இந்நிலையில், தாங்கள் எதிர்பார்த்தபடி கரும்பு விற்பனை ஆகாததால் வேதனை அடைந்த கரும்பு வியாபாரிகள், மலைபோல் குவித்து வைத்திருந்த கரும்புகளை சாலையோரம் போட்டுவிட்டு சென்றனர். 

இதையும் படிக்க : சீறி பாய்ந்த காளையின் கொம்பில்…சிக்கி தூக்கி வீசப்பட்ட வீரர்…அடுத்தது என்ன?

வியாபாரிகள் போட்டுவிட்டு சென்ற கரும்பு கட்டுகளை சாலையோரம் செல்லும் பொதுமக்கள் கூட எடுத்துச் செல்ல முன் வராததால் கரும்பு கட்டுகள் குவியல், குவியலாக சாலை ஓரம் கேட்பாரற்று  கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வருடத்தில் ஒரு நாள் மட்டும்  கரும்பு விற்பனை செய்யும் வியாபாரிகள் கரும்பு விற்பனை மந்தமானதால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »