Press "Enter" to skip to content

இன்று காணும் பொங்கல்…மெரினாவில் குவியும் மக்கள்…2 LED திரை அமைத்த காவல் துறையினர்!

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி :

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் ராஜ் என்ற மாடுபிடி வீரர் மாடு குத்தி தூக்கி வீசியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது :

இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற மதுரை மாவட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழியுடன் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது அவர்களுடன் நடிகர் சூரியும் கலந்து கொண்டார்.

இதையும் படிக்க : மீண்டும் திமுகவில் இணைகிறாரா மு.க. 

அழகிரி…?

10 சுற்றுகள் :

இப்போட்டியில் ஆயிரம் காளைகள், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக போட்டி நடைபெற உள்ளது. தொடர்ந்து, போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பிலும்,  சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி்ஸ்டாலின் பெயரில் தலா ஒரு தேர் பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்க நாணயம் பரிசு :

அதேபோன்று, போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. போட்டியின்போது மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் வீரர்களை கண்காணிக்க சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது.

தனி பார்வையாளர் இடம் ஒதுக்கீடு :

இந்த போட்டியை காண்பதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக தனி பார்வையாளர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »