Press "Enter" to skip to content

தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த சே குவேரா மகள்….எதற்காக?

ஜம்மு காஷ்மீர் | கடும் ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி பெண்ணை, பனியால் மூழ்கிய குப்வாராவில் இருந்து இந்திய ராணுவத்தினரால் உலங்கூர்தி மூலமாக மீட்கப்பட்டார். அவரை தலைநகரான ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

சித்ராகூட் பகுதியைச் சேர்ந்த, கர்ப்பிணி பெண்ணான திருமதி நஸ்ரத் பேகம், ப்லாசெண்டா ப்ரிவியா என்ற மருத்துவ பிரச்சனையுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (14 ஜனவரி) அன்று, ஒரு வாரமாக இருந்த கடுமையான பனி பொழிவு காரணமாக சிகிச்சைக்காக எங்கும் செல்ல முடியாமல் நஸ்ரத் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க | 72 பேருடன் சென்ற விமானம் விபத்து – குறைந்தது 68 பலி என கணிப்பு…

 

மேலும், தலைநகர் ஸ்ரீநகருக்கு செல்லும் வழியான NH 701-வும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால் நஸ்ரத் திக்குத் திசையின்றி தவித்துக் ஜ்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சிவில் நிர்வாகம் உதவி கோரியவுடன், இந்திய இராணுவம் உடனடியாக அழைப்பிற்கு பதிலளித்தது நோயாளி நஸ்ரத்தின் உயிரைக் காப்பாற்ற இரத்த தானம் செய்ய பல ராணுவ வீரர்கள் விருப்பத்துடன் முன்வந்தனர்.

அவதிப்பட்டுக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை எஸ்டிஹெச் கர்னாவில் அனுமதித்துள்ளதாக, சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) கர்னா மருத்துவர் குல்சார் அஹ்மத் ராதர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்னா, கேரன், மச்சில், புத்னமால் மற்றும் கும்காடி உள்ளிட்ட கடுமையான பனிப்பொழிவு பகுதிகளின் உள் இணைப்புச் சாலைகள் பனியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு மருத்துவ அவசர உலங்கூர்தி சேவையும் பொதுமக்களின் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் துணை ஆணையர் தெரிவித்தார்.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | மேள தாளத்துடன் ஒரு ஊரே சேர்ந்து நடத்திய விநோத திருமணம்…

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »