Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் எல்லை மீறும் அதிகாரம்….

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு தலைக்கவசம் வழங்குவதாக கூறி கேலிக்கு ஆளான ஜெர்மனி ராணுவ பெண் அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். 

உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்காவும், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. அந்த நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவில் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. 

இந்த நிலையில் ஜெர்மனி ராணுவ பெண் அமைச்சரான கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு 5 ஆயிரம் தலைக்கவசம்டுகளை வழங்குவதாக சமீபத்தில் அறிவித்தார்.  போரில் ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிநவீன ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில், ஜெர்மனி ராணுவ அமைச்சரின் இந்த அறிவிப்பு கேலிக்குள்ளானது.  

இந்த நிலையில் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் ராணுவ அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்……..

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »