Press "Enter" to skip to content

ஈபிஎஸ்க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி மட்டுமே இலக்கு எனவும், வேட்பாளர் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில்  வெளியாகும் எனவும் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 

ஈபிஎஸை சந்தித்த ஜி.கே.வாசன் :

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை :

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சித்லைவர் ஜி. கே. வாசனுடன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா,  பெஞ்சமின் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிக்க : தேவாரம், திருவாசகம் உட்பட 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர்…!

ஜி.கே.வாசன் பேட்டி :

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன், அ.தி.மு.க.உடன் சுமூகமான உறவு தொடர்வதாகவும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி மட்டுமே இலக்கு எனவும், இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார். 

ஜெயக்குமார் பேட்டி :

இதனிடையே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சின்னம்  குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சின்னம் குறித்து தற்போது பேச வேண்டிய சூழல் இல்லை என்றும், வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு சின்னம் குறித்து முடிவெடுக்கலாம் என்றும் கூறினார். 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »