Press "Enter" to skip to content

பிரதமர் மோடியின் நலத்திட்ட பணிகள்….. தேர்தல் நோக்கமா?!!

பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

கர்நாடகாவில்…:

கர்நாடகா மாநிலம் யத்கிரி மாவட்டம் கோடேக்கல் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று நவீனமயமாக புதுப்பிக்கப்பட்ட  நாராயண்பூர் இடது கால்வாய் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.  அப்போது, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் கர்நாடகா மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, காலாபுரகி மாவட்டம் மால்கெட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வசதிகளையும் அர்ப்பணித்தார்.  அப்போது பேசிய அவர், இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை மட்டும் பெற்றதாகவும் அவர்களின் முன்னேற்றத்திற்கு எதையும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவில்..:

அதன் பின்னர் மும்பை சென்றடைந்த மோடி, இரண்டு புதிய பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) வழித்தடங்களில் தொடர் வண்டிசேவையைத் தொடங்கி வைத்துள்ளார்.

 மேலும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கான்கிரீட் சாலைகள், சத்ரபதி சிவாஜி தொடர் வண்டிமுனையம்  என 38 ஆயிரம் கோடி மதிப்பிலான  திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதை  தொடர்ந்து மெட்ரோ தொடர் வண்டியில் பயணித்து  இளைஞர்களுடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி.

தேர்தல் நோக்கமா?:

கர்நாடகாவிலும் மகாராஷ்டிராவிலும் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  அதன் காரணமாகவே பிரதமர் அவசரம் அவசரமாக மக்கள் நலப்பணிகளை செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஈரோடு சட்டமன்ற தொகுதி யாருக்கு….. பேச்சுவார்த்தையின் முடிவு என்ன?!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »