Press "Enter" to skip to content

வடமாநில தொழிலாளி மீது பாய்ந்த துப்பாக்கி குண்டால் பரபரப்பு…

திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெடி விபத்து:

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சிக்கி ஒரு பெண் தொழிலாளி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சாத்தூரில்..:

சாத்துாரை அடுத்த கணஞ்சாம்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் அங்கிருந்த 7 அறைகளும் தரைமட்டமானது.  

மீட்பு பணி:

தகவலறிந்து சென்ற 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.  அதில் சத்திரப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரி என்ற தொழிலாளி உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  படுகாயமடைந்த 6 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகாசி:

இதேபோல் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.  இதில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த திருத்தங்கலை சேர்ந்த ரவி உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த சாமுவேல் ஜெயராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திண்டுக்கல்:

கடந்த 2 தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வெடிவிபத்தில் கணவன் மனைவி உயிரிழந்தனர். 

இந்நிலையில் விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுகு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பரப்பரப்பான கடைசி நிமிடங்கள்……கிராஸ் ஓவர் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா….

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »