Press "Enter" to skip to content

ஷாருக்கான் யார்…..என்னை யாரும் அழைக்கவில்லை….

புதுச்சேரி | வில்லியனுார் தொகுதிக்குட்பட்ட  பங்கூர் பகுதி சாராயக்கடை அருகே ஏரிக்கரை சாலையில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் சாராய கேன்கள் கொண்டு வந்து போலி மதுபானம் தயாரிக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவின்பேரில், தாசில்தார் சிலம்பரசன் மேற்பார்வையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ரகு (எ) அய்யப்பன், (32) என்பவருக்கு சொந்தமான வீட்டில்  சோதனை செய்தனர்.

மேலும் படிக்க | 15,000 லிட்டர் அமிலம் கலந்த பால் கொட்டி அழிப்பு…

அதில் அந்த வீட்டின் வளாகத்தில் வைக்கோல் போரில் மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார வண்டியில் புதுச்சேரியில் தயாரிக்கப்படும் மது வகைகளான பீர் பிராந்தி, விஸ்கி, ஓட்கா உள்ளிட்ட மது வகைகள் என 280 அட்டை பெட்டிகளில் இருந்தன.

இதே போல் வீட்டின் உள்ளே இருந்த  காலி பாட்டில், மூடி, மதுபானம் தயாரிக்க தேவையான எரிசாராயம், வண்ண மற்றும் வாசனை தரும் கெமிக்கல் இருப்பதையும் கண்டிப்பிடித்த கலால் துறையினர் அனைத்து மதுபானம் மற்றும் அதனை தயாரிக்க வைத்திருந்த பொருட்கள், பார வண்டி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க | ட்ரோன் பறக்கத் தடை விதித்து காவல்துறை உத்தரவு…

 

தொடர்ந்து போலி மதுபான தயாரிப்பில் ஈடுப்பட்ட குபேர் (எ) லட்சுமி நாராயணன், லுார்துநாதன், புருேஷாத்தமன்,  பிரபு, மோதிலால் (எ) ரகுராமன், ஆகியோரை கைது செய்து கலால் துறைக்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், இவர்கள் போலி மதுபானம் தயாரித்து வருவதாகவும், சில நேரங்களில் எரிசாராயம் பற்றாகுரை ஏற்பட்டால் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை மொத்தமாக வாங்கி, தமிழக பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | தங்கை மீது காதலில் விழுந்த அண்ணன், கிணற்றில் விழுந்து தற்கொலை…

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ. 25 லட்சம் எனவும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரகு, முகிலன் ஆகிய இருவரை கைது செய்த பிறகே அவர்கள் எந்தந்த தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் விற்பனை செய்துள்ளார்கள் என்பது தெரியவரும் என கலால் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் நுழைந்த ஆளில்லா விமானம்…..

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »