Press "Enter" to skip to content

தம்பதி சமேதராக தேர் ஊர்வலம் வந்த ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள்…

பெரம்பலூர் | வீடு பட்டிகளில் கட்டப்பட்டு இருக்கும் ஆடுகள் களவு போவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், துணைஆய்வாளர் மணிகண்டன், தலைமையிலான எஸ்.எஸ்.ஐ-க்கள் சிவக்குமார், ரமேஷ், மணிகண்டன், காவல் துறையினர் இளவரசன், கார்த்திக் ஆகியோர் அடங்கிய குற்றப்பிரிவு போலீசர் தனிப்படை பொறி வைத்து ஆங்காங்கே தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல், ஆடு திருடர்களை அடையாளம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இன்று காலை சுமார் 7 மணி அளவில், காவல் துறையினர் பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த டாட்டா மேஜிக் வேன் ஒன்று வேகமாக சென்றது.

மேலும் படிக்க | ஆட்கடத்தல் வழக்கில் அரசு மருத்துவர் கைது…

அதனை விரட்டி பிடித்து சோதனையிட்ட போது, அதில் 3 வயது மதிக்க தக்க ஆண் மான், 8 மாதம் உள்ள ஆண் மான், 2வயதுள்ள பெண் மான் ஒன்று என 3 மான்களும், 2 கள்ளத்துப்பபாக்கிகளும் இருந்தது.

பின்னர், வேனில் வந்த நபர்களை பிடித்து விசாரித்த போது, சோலைதமுத்து மகன் பிரபல வேட்டைமணி (எ) மணிகண்டன் (24). முருகேசன் மகன் ராமசந்திரன் (30), வெள்ளனூரை சேர்ந்த கணேசன் மகன் கோவிந்தன் (33), பெருமாள் மகன் கார்த்தின் (19), 17 வயது மற்றொரு சிறுவன் ஒருவன் என 5 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், மான்களை திருச்சி மாவட்டம், எதுமலை வனப் பகுதியில் வேட்டையாடி வந்தது தெரியவந்தது.

மேலும் படிக்க | நாயை நாய் என்று கூப்பிட்டதால் முதியவருக்கு முடிவு கட்டிய குடும்பம்…

கள்ளத்துப்பாக்கிகளில் ஒன்று வேட்டைமணிக்கும், மற்றொரு துப்பாக்கியும், வேனும் கோவிந்தனுக்கும் சொந்தமானது என தெரியவந்தது. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேட்டையாடி மானின் கறியை சாப்பிட்டும், விற்றும் வந்தது தெரியவந்தது.

குற்றப்பிரிவு காவல் துறையினர், மான், வேன், துப்பாக்கிகளை திருச்சி வனத்துறையினரை வரவழைத்து, பெரம்பலூர் வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இவர்கள் கோனேரிப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் ஆடு திருடுவதையும் காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இவர்களிடம்,மான் கறியை விலைக்குசாப்பிட்டவர்களின் விவரங்களை வனத்துறையினர் சேகரித்து வருகின்றனர். ஆடு கொள்ளையர்களை பிடிக்க போன காவல் துறையினருக்கு மான் வேட்டை கும்பலை பிடித்த போலீசாரை, காவல் துறை, உயர் அதிகாரிகள், அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

மேலும் படிக்க | மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணவர் பலி…

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »