Press "Enter" to skip to content

விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட பயணி….விமானத்தில் அதிகரிக்கும் முறைகேடான சம்பவங்கள்….

கருவில் கடுமையான அசாதாரணங்கள் இருப்பதையும் குழந்தை உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் பிறக்கும் என்றும் சோனோகிராஃபியின் வழியாக மனுதாரர் அறிந்துகொண்ட பிறகு கருக்கலைப்பு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 

கருப்புக்கலைப்பு வேண்டாம்:

நீதிபதிகள் கவுதம் படேல் மற்றும் எஸ்.ஜி.டிகே ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் மருத்துவக் குழுவின் கருத்தை முற்றிலும் நிராகரித்துள்ளது.  கருவில் தீவிரமான குறைபாடுகள் இருந்தாலும், கர்ப்பம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் இருப்பதால், அதை நிறுத்தக்கூடாது என்று மருத்துவ வாரியம் கூறியிருந்தது.

அசாதாரணமான:

கருவில் கடுமையான அசாதாரணங்கள் இருப்பதையும் குழந்தை உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் பிறக்கும் என்றும் சோனோகிராஃபியின் வழியாக மனுதாரர் அறிந்துகொண்ட பிறகு கருக்கலைப்பு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 

புரிந்துகொள்ளாத வாரியம்:

தம்பதியரின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மருத்துவ வாரியம் கருத்தில் கொள்ளவில்லை என்று அமர்வு கூறியுள்ளது. மனுதாரரின் சூழ்நிலையை முற்றிலும் புறக்கணித்து மருத்துவ வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது எனவும் வாரியத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டால், மனுதாரர் வாழ்நாள் முழுவதும் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை வாரியம் ஏன் புரிந்து கொள்ள முயலவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.  மேலும், காலதாமதம் ஏற்பட்டுள்ளதை மட்டுமே வாரியம் கவனித்துள்ளது எனவும் ஆனால் மற்ற அம்சங்களைப் பார்க்காதது முற்றிலும் தவறானது என்று அமர்வு கூறியுள்ளது

“கர்ப்ப காலம் ஒரு பொருட்டல்ல”:

நீதிமன்றம் தனது உத்தரவில், “கருவில் அசாதாரண நிலை இருப்பதால் கர்ப்ப காலம் முக்கியமற்றது. மனுதாரர் எடுக்கும் முடிவு எளிதானது அல்ல.  ஆனால் அவசியமானது.  அது அவளுடைய முடிவு, அவள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். 

 உரிமை மனுதாரரிடம் மட்டுமே உள்ளது.  மருத்துவ வாரியத்திற்கு அதில் உரிமை இல்லை.” என பம்பாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருக்கலைப்பு வேண்டாம்:

காலதாமதத்தை காரணம் காட்டி கர்ப்பத்தை கலைக்க மறுப்பது கருவில் மட்டுமின்றி தாயின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மேலும் நிச்சயமாக கருக்கலைப்பு செய்யக்கூடாது என்ற இந்த முடிவு பெற்றோரின் ஒவ்வொரு நேர்மறையான குணத்தையும் பாதிக்கும் எனவும்  மருத்துவக் குழுவின் கருத்தை ஏற்றுக்கொள்வது என்பது மனுதாரர் மற்றும் அவரது கணவர் மீதும் முடிவை திணிப்பதாகவே அமையும் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  புல்வாமா தாக்குதல் பாஜகவின் திட்டமிட்ட சதி…..

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »