Press "Enter" to skip to content

எய்ம்ஸ் எங்கே?…ஒற்றை செங்கலுடன் போராட்டம்…நிதி ஒதுக்குமா மத்திய அரசு…!

விழுப்புரம் | திண்டிவனத்தின் மையப்பகுதியில் இந்திரா காந்தி பேருந்து நிலையம் இயங்கி வந்தது. இந்தப் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிய நிலையில் சேதம் அடைந்து காணப்பட்டதால், இடிந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்க்கு முன்பாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என சிறுபான்மைப் பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உத்தரவிட்டார். 

இந்நிலையில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சிக்கு சொந்தமான 6 ஏக்கர் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக முயற்சிகள் நடைபெற்று அதற்கான பணிகள் தொடங்கியது. 

மேலும் படிக்க | உதயநிதி விளம்பர துறை அமைச்சராக இருக்க கூடாது – பாஜக உண்ணாவிரதம்… 

இந்நிலையில் இன்று சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செஞ்சி. மஸ்தான் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 

பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி. மஸ்தான், திண்டிவனத்தில் 40 ஆண்டுகள் மக்களின் கனவு திட்டமான பேருந்து நிலையம் அமைவதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் சட்டசபையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும் படிக்க | மக்களுக்கு நன்மை செய்யக்கூடாது என்பதற்காகவே ஆளுநர்..! கனிமொழி ஆவேசம் 

இதன் தொடர்ச்சியாக சட்டசபையில் முதல்வர் மு க ஸ்டாலினிடம் இது குறித்து நான் கோரிக்கை விடுத்தேன். துறை சார்ந்த அமைச்சரும் இதற்காக முதல்வரிடம் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் தற்போது புதிய பேருந்து நிலையம் அமைவதற்காக பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார். 

இதில் மாவட்ட ஆட்சியர் மோகன் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சார் ஆட்சியர் கட்டா  ரவி தேஜா,நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்  கொண்டனர். 

மேலும் படிக்க | பண்டிகை காலங்களில் அரசியல்வாதிகளை ( சின்ராச கையில பிடிக்க முடியாது ) போட்டி போட்டு தேதிகளை அறிவிக்கும் கட்சியின் தலைமை 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »