Press "Enter" to skip to content

வேங்கைவயல் பிரச்சனை – சவுக்கு சங்கருக்கு பதிலடி கொடுத்த சிந்தனை செல்வன்

 நாடாளுமன்ற உறுப்பினர்  சிந்தனைச்செல்வன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கானா பயணசென்றிருந்தார். அங்குள்ள தலித் மக்களுக்கான தலித் பந்து திட்டம் பற்றியும் பயன் பெற்ற தலித் பயனாளிகளை சந்தித்தும் வந்தார். அந்த  அனுபவங்களை  தன் முகநூல் பக்கத்தில் லைவ் ல் பகிர்ந்து கொண்டபோது,

சவுக்கு சங்கருக்கு பதிலடி 

புதுக்கோட்டை வேங்கைவயல் பிரச்சனை குறித்து சவுக்கு சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம் ஏன் நீங்கள் ஆளுநர் சட்டசபை விட்டு வெளியேறியதை பற்றி பேசவேண்டும்? அதைவிட முக்கியமான பிரச்சனை வேங்கைவயல் இருக்கிறது எனவும் கூறினார்.

விசிக சிந்தனை செல்வன் பதில்  

 வேங்கை வயல் பிரச்சனைக்கு முதல் ஆளாக கண்டன குரல் கொடுத்தது  திருமாவளவன் மட்டுமே .  ஆளுநர் உரை தமிழ்நாட்டிற்கு எதிரான பேச்சு ஆகியவற்றை கண்டிப்பது தலைவரின் கடமை. சவுக்கு சங்கர் மாதிரியான  ஆட்களிடம்   எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விசிகவின் மீது எவ்வளவு கருணை, இவ்வளவு உணர்ச்சியுடன் பேசுகிறார்.

 ஆளுநர் பிரச்சனை முக்கியமா? வேங்கை வயல் பிரச்சனை? எனகேட்ட சவுக்கு சங்கருக்கு  சட்டமன்றத்தில்  கவன ஈர்ப்பு தீர்மானம்  நிறைவேற்றுமாறும், வேங்கைவயல் பிரச்சனை பற்றி  சட்டமன்றத்தில் கண்டிப்பாக கவனம் ஈர்க்க வேண்டும் என கூறியவர் திருமாவளவன்.

 சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதிக்கப்பட்டது.  . பேசாத தலைவர் எடப்பாடி மட்டுமே… எடப்பாடி வேங்கைவயல் பற்றி பேசவில்லை. 
 கடுமையான கண்டனம் பாஜக தெரிவித்தது .


tn budget 2022, வரவு செலவுத் திட்டத்தில் அரசு இப்படி செய்யும்னு எதிர்பார்க்கல: அதிர்ச்சி கொடுத்த  விசிக சிந்தனைச்செல்வன்! - vck sinthanai selvan has demanded allocate more  funds for the development of ...

 திருமாவளவன்  போல ஈழத்தமிழருக்கு குரல் கொடுத்தது வேறு யாரும் இருக்க முடியாது. பிரளயமான தலைவர் 90 ல் கட்சி ஆரம்பித்ததில் அப்படி தான் தலைவர் திருமாவளவன் இருக்கிறார். சவுக்கு சங்கர் ஆதரவாக பேசுவது போல் பேசி பிறகு கட்சி உடைக்கும் பணியே செய்கிறார். சவுக்கு சங்கரின் குரல் நீங்கள் ஆளுநர் பற்றி ஏன் பேசுகிறீர்கள் வேங்கைவயல் பிரச்சனை பற்றி பேசுங்கள் என சொல்வது  அபத்தமாக உள்ளது எனவும் கூறினார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »