Press "Enter" to skip to content

2002 குஜராத் கலவரம்…. நிரூபிக்கப்படாத குற்றமும் விடுதலையும்….

ராம்சரிதமனாஸ்(ராமாயணத்தின் ஹிந்தி பதிப்பு) தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா தெரிவித்த கருத்து சர்ச்சையை அதிகரித்து வருகிறது.  மவுரியாவின் அறிக்கையில் இருந்து அவரது சொந்த கட்சியே ஒதுங்கியுள்ள அதே நேரத்தில், மவுரியாவின் இந்த கருத்துக்கு, கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

காவல்நிலைய புகார்:

இதற்கு முன்னதாக, பீகார் கல்வி அமைச்சர் பேராசிரியர். சந்திரசேகர் யாதவும் இதே கருத்தை வெளியிட்டு பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.  தற்போது மவுரியாவின் இந்த கருத்து உ.பி. அரசியலில் சூடு பிடித்துள்ளது.  மவுரியாவின் அறிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்து  வருகிறது.  மறுபுறம், ஹஸ்ரத்கஞ்ச் மற்றும் தாக்குர்கஞ்ச் காவல் நிலையங்களில் சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

என்னக் கூறினார்…:

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சுவாமி பிரசாத் மௌரியா என்ன கூறினார்? மவுரியாவின் அறிக்கைக்கு பாஜக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்? மவுரியாவின் அறிக்கைக்கு அகிலேஷ் யாதவின் பதிலென்ன? மவுரியாவின் எந்த அறிக்கைகள் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது? ராம்சரித்மனாஸ் குறித்து தலைவர்கள் ஏன் இத்தகைய அறிக்கைகளை கொடுக்கிறார்கள்? அதன் அரசியல் முக்கியத்துவம் என்ன? புரிந்து கொள்வோம்… 
 
சுவாமி பிரசாத் மௌரியா கூறியதென்ன?:

ராம்சரித்மனாஸில் பட்டியல் இன மக்கள் மற்றும் பெண்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.  துளசிதாஸ் தனது சொந்த மகிழ்ச்சிக்காக அதை எழுதியுள்ளார்.  கோடிக்கணக்கான மக்கள் அதைப் படிப்பதில்லை. இதைத் தடை செய்ய வேண்டும்.  ராம்சரித்மனாஸை முட்டாள்தனம்.  அதிலிருந்து சில வசனங்களை நீக்க வேண்டும்.

பாஜகவின் விமர்சனம் என்ன?:

சுவாமி பிரசாத் மவுரியாவின் அறிக்கை குறித்து பாஜக தலைவர் அபர்ணா யாதவ், “ராமர் இந்தியாவின் குணாதிசயம்.  ராமர் இன்றும் அதே முக்கியத்துவம் வாய்ந்தவர்.  ராம்சரித்மனாஸ் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், இதைப் படிக்கும் போது, புதிதாகத் தோன்றும்.  இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ராமரை வணங்குகிறார்கள்.  இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தைப் பற்றி கருத்து சொல்வது தவறு.  இந்தக் கூற்று சுவாமி பிரசாத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.” என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில், பாஜக தலைவர் வினீத் ஷர்தா, ”எந்த மதத்தை நோக்கியும் இப்படிப் பேச யாருக்கும் உரிமை இல்லை.  அப்படிப்பட்டவர்களின் மன சமநிலை கெட்டுவிட்டது.  அப்படிப்பட்டவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவின் பதில்:

சுவாமி பிரசாத் மவுரியாவின் கருத்துக்கு சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.  அதே சமயம், அவரது அறிக்கையில் இருந்து கட்சியும் ஒதுங்கி உள்ளது. 

 இது சுவாமி பிரசாத் மவுரியாவின் தனிப்பட்ட அறிக்கை என்று எஸ்பி தலைவர் ரவிதாஸ் மெஹ்ரோத்ரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

கட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் பொதுப் பிரச்னைகள் குறித்து தலைவர்கள் பேச வேண்டும் எனவும் ரவிதாஸ் கூறியுள்ளார். மேலும் எந்த மதப் புத்தகத்தைப் பற்றியும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறியாமையால் சுவாமி பிரசாத் அறிக்கை அளித்துள்ளதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மவுரியாவின் முந்தைய அறிக்கைகள்:

இதற்கு முன்பே சுவாமி பிரசாத் மவுரியாவின் அறிக்கைகளால் அரசியல் புயல்கள் ஏற்சமாஜ்வாதி எம்எல்சி பலமுறை சர்ச்சைக்குரிய அறிக்கைகளை அளித்துள்ளார்.  பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தாலும் சரி, பாஜகவில் இருந்தாலும் சரி, மௌரியா தனது அறிக்கைகளால் கட்சிக்கு நெருக்கடியை அதிகரித்து வருகிறார். 

2014ல், பிஎஸ்பியில் இருந்தபோது, ​​திருமணங்களில் கவுரி விநாயகரை வழிபடுவது குறித்து சுவாமி பிரசாத் மவுரியா கேள்வி எழுப்பினார்.  கர்பூரி தாக்கூர் பாகிதாரி சம்மேளனத்தில், திருமணங்களில் கௌரி விநாயகரை வழிபடக் கூடாது என்று கூறியிருந்தார்.  இது தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை தவறாக வழிநடத்தி அடிமைப்படுத்தும் சதி என்றும் கூறியிருந்தார்.

ஏன் இத்தகைய அறிக்கைகள்:

இதைப் புரிந்துகொள்ள, அரசியல் ஆய்வாளர் பேராசிரியர். அஜய்குமாரிடம் அளித்த விளக்கம்,”எந்த ஒரு அரசியல் தலைவரும் எப்போதும் தனது வாக்கு வங்கியையே பார்க்கிறார்.  தனது வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக, மற்றவர்களை அவமானப்படுத்த எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர். ராம்சரித்மனாசிலும் அப்படித்தான் நடக்கிறது.  இப்படி ராமசரிதமானசுக்கு விளக்கம் சொல்லி சாதி அரசியல் செய்கிறார்கள் இந்தத் தலைவர்கள்.” எனக் கூறியுள்ளார்.
 
தலைவர்களின் அறிக்கைகளின் அரசியல் அர்த்தம் என்ன? :

இதே கேள்வியை மூத்த பத்திரிகையாளர் பிரமோத் குமார் சிங்கிடம் கேட்டபோது ”அடுத்த ஆண்டு மகக்ளவை தேர்தல் நடக்கவுள்ளது.  பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பொது வாக்காளர்கள் என அனைத்து சாதியினரும் 2014 முதல் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றனர்.  மாநில கட்சிகளின்  வாக்குகள் பா.ஜ.க.வால் சரிந்து வருகிறது.  தற்போது பாஜகவுக்குப் போன இந்த வாக்கு வங்கியை மீட்க மாநிலக் கட்சிகள் முயற்சித்து வருகின்றன.   இவை அனைத்தும் இதன் ஒரு பகுதியாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ”எங்களுக்குள் மகாபாரதம் நடக்கவில்லை…..” சட்ட அமைச்சருக்கு பதிலடி தந்த காங்கிரஸ்…..

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »