Press "Enter" to skip to content

விவசாயிகளைக் கொலை செய்த ‘பாஜக’ மத்திய அமைச்சர் மகனுக்கு நிபந்தனை பிணை…

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் 5 பேரை தேர் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் மகனுக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 2021ம் ஆண்டு அனைவரது வாட்சாப்களிலும், மிகுதியாக பகிரப்பட்ட ஒரு காணொளி என்னவென்றால், போராட்டம் செய்து கொண்டிருந்த விவசாயிகள் மேல் தேர் வேகமாக சென்றதில், 5 பேர் மேல் தேர் ஏறி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து நடந்த கார், பாஜக்-வைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என்பவரது என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரைக் கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | பெரு நாட்டில் தொடரும் போராட்டம்….பதவி விலகுவாரா அதிபர்?!!!

இது நாடளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மனு அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற மார்ச் 14ம் தேதி வரை அவரது நடவடிக்கைகளை கவனித்து பின், அவரது வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | அரசுக்கு எதிராக போராட்டம்… உயர்ந்த பலி எண்ணிக்கை….

மேலும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு வழக்கு விசாரணை தவிர்த்து வேறு எந்த காரணத்திற்காகவும் வருகை தர தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது?

கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி காலை நேரம், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தனர்.

அவர்கள் செல்லும் வழியில் வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் பல விவசாயிகள் அமைதியான வழியில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டத்தில் அந்த தேர் வேகமாக வந்ததில், 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிக்கையாளர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | என்ன ஆனது ஜந்தர் மந்தர் விவசாயிகள் போராட்டம்…..!!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »