Press "Enter" to skip to content

வண்ண மின்விளக்குகளால் மின்னும் அரசு அலுவலகங்கள்…! செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!!

நாட்டின் வெற்றியை தீர்மானிப்பதில் மக்களின் வாக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருக்கிறார்.

வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி:

சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  கலந்து கொண்ட ஆளுநர் ரவி, வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய சீடி, வாக்காளர் குறிப்பேடு ஆகியவற்றை வெளியிட்டார்.

இதையும் படிக்க : அடுத்த 5 ஆண்டுகளில் 12 பில்லியன் டாலர் வர்த்தகமாக உயர்த்த முடிவு…!

விருதுகள் வழங்கிய ஆளுநர் :

மேலும், தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு விருதும், மாணவ – மாணவிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கினார்.

நாட்டின் வெற்றியை தீர்மானிப்பது யார்?:

இதன் பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டில் ஜனநாயகத்தை சிறப்பாக செயல்பட மிக முக்கிய பங்காக இருப்பது வாக்காளர்கள் தான், அதேசமயம், இந்திய அரசியலில் மாற்றத்தை தீர்மானிக்க கூடியவர்களாக இருப்பது இளைஞர்கள் தான் எனவும் குறிப்பிட்ட ஆளுநர், இந்திய தேர்தலில் பெண்கள் வாக்களிப்பதற்கு அளித்த உரிமையானது மாபெரும் ஜனநாயக வெற்றி என்று கூறினார். மேலும், நாட்டின் வெற்றியை தீர்மானிப்பதில் வாக்காளர்களின் வாக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »