Press "Enter" to skip to content

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு சைகை மொழியில் அஞ்சலி…

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

சாலையோரங்கள் மற்றும் சாலை மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல்  மற்றும் தூசிகள் படிந்து  வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில்  சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன. 

மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 41 வேட்புமனுக்கள் நிராகரிப்பு …..

எனவே, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்காள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மநாகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (பகுதி அளவு)  ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய சென்னை என்விரோ என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 15 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | 50 வருஷத்துக்கும் முன்னாடி நீர் ஆதாரம்…இப்போ…மிக மோசமான கூவம் நதி…மாறியது எப்படி?

அடுத்து, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் (பகுதி அளவு) மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 16 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் சார்பில் 47 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | ‘30’க்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்…

அதாவது மொத்தம் 78 மெக்கானிக்கல்  ஸ்வீப்பர் வாகனங்கள் பேருந்து சாலைகளில் மட்டும் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வாகனங்களின் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 கி.மீ அளவிற்கு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பேருந்து சாலைகளுடன் கூடுதலாக மாநகரின் முக்கியமான உட்புறச் சாலைகளையும் இந்த வாகனங்களை கொண்டு சுத்தம் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா!! – சேகர்பாபு பேட்டி

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »