Press "Enter" to skip to content

சென்னையில் தொடரும் பனிமூட்டம்…. மக்கள் அவதி!!!

தொடர்ந்து நான்கு நாட்கள் பெய்த கன மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது. இதனால்  விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | கழிவுநீர் வாய்க்காலை வெறும் கையால் சுத்தம் செய்த பணியாளர்கள்…

இந்நிலையில் அம்மாவட்ட வலங்கைமான் தாலுக்காவிற்கு உட்பட்ட மாணிக்கமங்கலம்,  தொழுவூர், பயித்தஞ்சேரி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமத்தில் சுமார் 5000 ஏக்கர்  சம்பா தாளடி நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளது.  இந்த  நெற்பயிர்கள்  அழுகி வயலிலேயே முளைத்து விட்டதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த அடைமழை (கனமழை)யின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நனைந்து அழுகியுள்ளது. எனவே கடன் வாங்கி விவசாய பணியை மேற்கொண்டு பருவம் தவறி பெய்த கன மழையால் நெற்பயிர்கள் முழுவதும் சேதமாகி உள்ளது.

மேலும் படிக்க | கொத்தடிகளாக இருந்த வடமாநில சிறுவர்கள் 24 பேர் சென்னையில் மீட்பு

 

இந்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட மாட்டார்கள் என வேதனை தெரிவித்த விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை  விவசாயிகள் சாலையில் கொட்டி  வெயிலில் உலர்த்தி வருகின்றனர்.

மழையால்  பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு  உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வேளாண்துறை அதிகாரிகள் முறையாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு  30 மூட்டைகள்  விளைச்சல் தரும் வரும்.

ஆனால் தற்போது பெய்த மழையால்  ஏக்கர் ஒன்றுக்கு 10 மூட்டைகள் கூட எடுக்க முடியாது எனவும்கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் பார்க்காமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்த திறனற்ற திமுக அரசு

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »