Press "Enter" to skip to content

அதானி மீது ஹிண்டபர்க் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு – வரவேற்கும் கம்யூ….

முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்

அதானி மீது ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவை மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கின்றது. மத்திய அரசு மாநில அந்தஸ்து தரவில்லை என்றால் முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

மார்க்கிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் அஜீஸ்நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த மார்க்கிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி புதுச்சேரி மாநிலத்தில், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு கல்வியை தனியார் மயமாக்க துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவும், 440 பள்ளிகளில் 18 அரசு புள்ளிகள் இதுவரை மூடப்பட்டுள்ளது. இதுபோன்று அரசு பள்ளிகளை மூடினால் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கொரோனா காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் 20 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து வெளியறி அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளார்கள்.

அந்த மாணவர்களை மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் முடிவை புதுச்சேரி அரசு செய்து வருகின்றது என குற்றச்சாட்டியவர், அரசு பள்ளிகளை நம்பி வந்த மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடவேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய் வரவு செலவுத் திட்டம்:  எளிய மக்களுக்கான வரவு செலவுத் திட்டம் இல்லை

மேலும் கடந்த 1ந்தேதி தாக்கல் செய்த மத்திய் வரவு செலவுத் திட்டம் ஏழை எளிய மக்களுக்கான வரவு செலவுத் திட்டம் இல்லை இது கார்ப்ரேட்டுக்கான வரவு செலவுத் திட்டம் என குற்றஞ்சாட்டிய ஜி.ராமகிருஷ்ணன், மக்கள் பணத்தை மோசடி செய்த அதானி குழுமத்தின் மீது அரசு தனியாக விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம், இந்நிலையில் அதானி குழுமம் செய்த மோசடி குறித்து ஹிண்டன்பர்க் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை, ஆகவே பிரதமர் மோடியை கண்டித்து வரும் 27 மற்றும் 28ல் புதுச்சேரியில் போராட்டம் நடத்தபப்டும் என தெரிவித்த அவர், அதானி மீது ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் விசாரிக்க எடுத்த முடிவு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கின்றது என்றார்.

மேலும் படிக்க | அரசின் திட்டங்கள் பயனாளிகளை சென்றடைகிறதா?

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் புதுச்சேரியில் ரேசன் கடைகளை திறக்கும்வரை போராட்டம் நடைபெறும் என்றும் மத்திய அரசு ரேசன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும், மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும் இல்லையெனில் ராஜினாமா செய்வேன் என முதல்வர் ரங்கசாமி அறிவிக்க வேண்டும் இரட்டை வேடம் போட வேண்டாம் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »