Press "Enter" to skip to content

AC மயமாகும் புறநகர் ரயில்கள் – ஒப்பந்தப்புள்ளி கால அவகாசம் நீட்டிப்பு…!

மக்களவையில் தயாநிதிமாறன் 

இன்று மக்களவையில், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் முன்னோடி திட்டத்தின் மீதான விவாதத்தின்போது ஒன்றிய அமைச்சகம், ஹைதராபாத் – பெங்களூரு இடையே அமைக்கப்படும் விரைவு சாலையில் முன்னோடி திட்டமாக கண்ணாடி இழை கேபிள்(Optical fibre Cable) அமைக்க உள்ளதாகவும், இதுபோன்ற திட்டத்தை நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தது. அதுசமயம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒன்றிய அமைச்சகத்திடம், இம்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தும்போது இத்திட்டங்களானது ஒன்றிய நெடுஞ்சாலைத்துறைக்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுமா என்றும் மேலும் தமிழ்நாடு அரசின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை-பெங்களூரு விரைவு சாலை எப்போது நிறைவுபெறும் போன்ற கேள்விகளை எழுப்பினார். 

அதன் விவரங்கள் பின்வருமாறு :  ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி அவர்கள் மிகவும் சுறுசுறுப்பான அமைச்சர், அனைத்து தரவுகளையும் விரல் நுனியில் வைத்திருக்கக்கூடியவர். இந்நிலையில் சாலை விரிவாக்க முன்னோடித் திட்டங்கள் குறித்து கேள்விகளை இரண்டு பகுதிகளாக உங்களிடம் எழுப்ப நான் விரும்புகிறேன்.

மேலும் படிக்க| நம்பி வந்தால் உயிர் கொடுக்கும் மதுரையில் நண்பர்களை ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் வரை கடன்: மக்கள் விரும்பத்தக்கதுடர் பிளான் செய்த கணவன் மனைவி தலைமறைவு

முதலில், தேசிய நெடுஞ்சாலைகளின் வழித்தடத்தில்/பாதைகளில் அமைக்கப்பட்டு வரும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள், சாலை விரிவாக்கத்தின் போது பாதிக்கப்படாமல் இருப்பதை அமைச்சகம் எப்படி உறுதி செய்கிறது? மேலும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்ந்த திட்டங்களின் போது அமைக்கப்படும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுமா அல்லது தனியார் ஆபரேட்டர்களுக்கும், ISP போன்ற இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் குத்தகைக்கு விடப்படுமா?

இரண்டாவதாக, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை குறித்து உங்களது பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு நீண்ட நாட்களாக உங்களிடம் முன்வைத்து வரும் கோரிக்கையை நினைவூட்ட விரும்புகிறேன். சமீபத்தில் சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வழித்தடத்தில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. 

ஒன்றிய அரசின்  திட்டங்களுக்கு தேவையான அனைத்து நிலங்களும் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், உங்களது ஒப்பந்ததாரர்கள் ஏதேதோ காரணங்களை சொல்லி நீதிமன்றத்திற்கு சென்று காலம் தாழ்த்தி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. 100 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே, கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் ஆகிறது. மேலும் சாலை சிதிலமடைந்து பரிதாபகரமான நிலையில் உள்ளது.

மேலும் படிக்க| நடுக்கடலில் வீசிய மூடையில் 12 கிலோ மேல் தங்கக்கட்டிகள் கண்டுபிடிப்பு.

ஒன்றிய அரசு வழக்கம்போல் இது எங்கள் தவறு அல்ல, ஒப்பந்ததாரர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வேலை  தாமதமாக நடைபெறுகிறது என்று கூறுவீர்கள். இது என்ன மாதிரியான  செயல்முறை? இதுபோன்ற பிரச்சனைகளை  சமாளிக்க ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைதான் என்ன?  ஒரு சாமானியன் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? ஒன்றிய அரசும், ஒப்பந்ததாரர்களும் இணக்கமான முடிவுக்கு வரமுடியாத காரணத்திற்காக தமிழ்நாடு மக்கள் ஏன் பாதிக்கப்படவேண்டும்?  எனவே இந்த திட்டங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவுபெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »