Press "Enter" to skip to content

ஜெயலலிதாவின் ஆன்மா…. புகார் அளித்த முன்னாள் அமைச்சர்….

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முறைகேடான வகையில் சந்திக்க திமுக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

புகார் எதற்காக?:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்கும் சூழலில் திமுக அரசு தினந்தோறும் ஜனநாயக அத்துமீறல்கள், வாக்காளர்களை மிரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதுக்குறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

பணப்பட்டுவாடா:

மேலும், அதிமுக வேட்பாளர் அறிமுகம் கூட்டத்திற்கு யாரும் செல்லக் கூடாது என்பதற்காக பணம், பிரியாணி என திமுகவினர் பட்டுவாடா செய்ததாக குற்றம்சாட்டிய அவர், பணம் பெற்றாலும் வாக்களிக்கப்போவது அதிமுகவிற்கு தான் எனவும் தெரிவித்துள்ளார்.

முறைகேடான தேர்தல்:

ஜனநாயகத்தை மதிக்காமல் திமுக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், முதலமைச்சர், உதயநிதியை தவிர மற்ற அனைவருமே ஈரோட்டில் தான் உள்ளனர் என்றும், தேர்தலை முறைகேடான வகையில் சந்திக்க திமுக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கூட்டணியில் பிரச்சினை இல்லை:

பா.ஜ.க – அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என குறிப்பிட்ட அவர், அண்ணாமலைக்கு பதில் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றதாகவும், எனவே முன்கூட்டியே பயணம் திட்டமிட்டதால் தான் யாழ்பாணம் சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் ஆன்மா:

டிடிவி , சசிகலா, ஓ.பி.எஸ்-சை எம்.

ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா நிச்சயம் மன்னிக்காது என கூறிய அவர், இரட்டை இலை வெற்றிச்சின்னம் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

பொய் கூறும் திமுக:

85% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என முதலமைச்சர் பொய் கூறி வருவதாகவும்,திமுகவை விட மோசமான ஆட்சி இருக்க முடியாது என்றும்,காவலர்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை, தர்ம அடி வாங்கும் காவல்துறையாகவே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஆட்சியை கலைத்த பாஜக… மிரட்டிய திமுக….

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »