Press "Enter" to skip to content

நடை மேம்பாலம் திறக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு…

தருமபுரி | பெரியாம்பட்டி அடுத்துள்ள ஏ.சப்பானிப்பட்டி கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் இறுதியில் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.

அதே போல் இந்தாண்டும் காமாட்சியம்மன் கோயில் திருவிழா கடந்த 6 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து வருதல், முருக பெருமானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிசேகம் செய்தல் என ஒரு வாரம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் வரும் 18 ம் தேதி…5 கோயில்களில் மகாசிவராத்திரி விழா…அமைச்சர் சொன்ன தகவல்!

இந்த விழாவில் அதே பகுதியை சேர்ந்த 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு தங்களது உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். 

மேலும் இன்று முக்கிய நாளான இந்த விழாவில்  அம்மன் கரகத்தை பூலான் நதி ஆற்றங்கரையில் வைத்து  ஒரு பகுதியில் ஆண்களும் மற்றொரு பகுதியில் பெண்களும் அமர்ந்து கொண்டு சக்தி அழைப்பு செய்தனர்.

அப்போது அம்மன் அருள் வந்த பக்தர் மீது கரகம் வைத்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். அப்போது கரகம் எடுத்துசெல்பவர் தரையில் நடந்து செல்லாமல் இருக்க பக்தர்கள் அனைவரும் தரையில் படுத்துகொண்டனர். பின்னர் கரகம் எடுத்து செல்பவர் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு தரையில் படுத்திருக்கும் பக்தர்கள் மீது நடந்து சென்றனர்.

மேலும் படிக்க | ரூ.10,54,445 மற்றும் 36.5 கிலோ தங்கம் காணிக்கை…

கரகம் தங்களது மீது நடந்து சென்றதால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும், நோய் தீரும், தொழில் வளர்ச்சி மற்றும் குடும்ப வளர்ச்சி என நினைத்து காரியம் கிடைக்கும் என்பதால் தரையில் படுத்துக்கொண்டு நூதன வழிபாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுப்பட்னர்.

ஆதனை தொடர்ந்து கோயில் வளாகத்தில் குழுமிய பக்தர்களுக்கு அருளாசியும், சாட்டையடி நினழ்வும் நடைபெற்றது. கடைசி நாளான வரும் 12 ம் தேதி நடைபெரும் ஆண்கள் மட்டுமே பங்குபெற்று கிடா வெட்டி நூதன வழிபாடு நடைபெரும்.

இத்திருவிழாவிற்கு ஏ.சப்பானிபட்டி கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா தொடக்கம்…

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »