Press "Enter" to skip to content

ஒரே நாளில் 4 பண இயந்திரம் மையங்களில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்…!

சென்னை மற்றும் பூந்தமல்லியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நகர் வழியாக பேருந்து நிலையம் செல்லும் சாலை ஓரத்தில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் மெட்ரோ வாட்டர் திட்டத்திற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதற்காக சாலை ஓரத்தில் மிகப் பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக எந்த வாகனங்களும் செல்லாத வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டு, அந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வர்ற போற நெடுஞ்சாலைக்காக இப்போ இருக்கற சாலையை ஏன் எடுக்குறீங்க?

இதனால் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக, பூந்தமல்லி மற்றும் சென்னையிலிருந்து வரும் எந்த  பேருந்தும் ஸ்ரீபெரும்புதூர் நகருக்குள் செல்வதில்லை.

இதனால் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்ல வேண்டிய பள்ளி மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர், முதியோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

இது குறித்த எந்த முன்னறிவிப்புகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டிய மக்கள் அனைவரும், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கி விடப்படுகின்றனர். இங்கிருந்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | நடை மேம்பாலம் திறக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு…

அதிலும் காலை நேரத்தில்,  பள்ளி மாணவ, மாணவியர் புத்தகக் பையை தோளில் மாட்டிக் கொண்டு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச் செல்வதும், மாலையில் பேருந்துக்காக சாலையைக் கடந்து ஓடி வருவதும் பார்ப்பதற்கு பரிதாபமாகவே உள்ளது.

மேலும் பிராட்வே, கோயம்பேடு, பூந்தமல்லி, ஆகிய பேருந்து நிலையங்களில் ஏறும் பொதுமக்களுக்கு பேருந்துகள் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் செல்லாது என்ற தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை.

மேலும் படிக்க |

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
com/posts/tamilnadu/Annasalai-collapse-accident-Bail-petition-dismissed” target=”_blank” rel=”noopener”>அண்ணாசாலை இடிபாடு விபத்து… பிணை மனு தள்ளுபடி….

டீலக்ஸ் பேருந்துகளில் ஏறி அனுமதிச்சீட்டு எடுத்து பயணிக்கும் மக்களுக்கு எதற்காக இங்கு இறக்கி விடப்படுகிறோம், இங்கிருந்து எப்படி செல்ல வேண்டும் என்ற அந்த தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை.  கடந்த10 நாட்களுக்கும் மேலாக இதே நிலை நீடிப்பத்தால், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 

பாதாள சாக்கடை மற்றும் சென்னை மெட்ரோ வாட்டர் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் நகருக்குள் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

மாலை முரசு செய்திகளுக்காக ஸ்ரீபெரும்புதூர் செய்தியாளர் ரமேஷ்

மேலும் படிக்க | மீண்டும் உண்ணா போராட்டம் அறிவிக்கும் ஆசிரியர்கள் : காரணம் என்ன?

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »