Press "Enter" to skip to content

அதானி விவகாரம் குறித்து பதிலளிக்க மத்திய அரசு மறுப்பு…திருச்சி சிவா குற்றச்சாட்டு!

13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

ராஜினாமாக்கள்:

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி,  லடாக் துணைநிலைஆளுநர் ராதாகிருஷ்ணன் மாத்தூர் ஆகியோரின் ராஜினாமாக்களை குடியரசு தலைவர் த்ரௌபதி முர்மு ஏற்றுள்ளார்.

இடமாற்றங்கள்:

மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நாகலாந்து மாநிலத்துக்கு ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 ஆந்திர ஆளுநராக இருந்த பிஸ்வ பூஷன் ஹரிசந்திரன் சத்தீஸ்கர் ஆளுநராகவும் பொறுப்பேற்கவுள்ளனர்

சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த சுஷ்ரி அனுஷ்யா மணிப்பூர் ஆளுநராகவும், பீகார் ஆளுநராக இருந்த பாகு சவுகான் மேகாலயா ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய ஆளுநர்கள்:

ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டின் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஆந்திர மாநில ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீரூம் அருணாசலப்பிரதேசத்தின் ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அருணாசலப்பிரதேசத்தின் ஆளுநராக திரிவிக்ரம் பர்நாயக்கும், சிக்கிம் ஆளுநராக லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யாவும், இமாசலப்பிரதேச ஆளுநராக சிவ் பிரதாப் சுக்லாவும் குலாப் சந்த் கத்தாரியா அசாம் ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் ஆளுநராக, இமாசலப்பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும், மகாராஷ்டிர ஆளுநராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநரான ரமேஷ் பயசும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

லடாக் துணைநிலை ஆளுநராக அருணாசப்பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் B.D.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க:    தொடரும் பாஜக நியமனங்கள்…. புதிய ஆளுநரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »